
காசா முனை,
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்து வருகிறது.
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 2 பேரை ஹமாஸ் இன்று விடுதலை செய்துள்ளது. மேலும், 4 இஸ்ரேலிய பணய கைதிகளை இன்றே ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்கிறது. அதற்கு ஈடாக 602 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.
முன்னதாக, அக்டோபர் 7ம் தேதி தாக்குதலில் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட ஷிரி பிபசின் உடலை ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலிடம் ஒப்படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.