"இவன் தந்திரன் 2" படப்பிடிப்பு அப்டேட்

6 hours ago 2

இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்.கண்ணன் 'ஜெயம் கொண்டான்' படத்தில் தனது திரைப்பயனத்தை துவங்கி, 'கண்டேன் காதலை', 'இவன் தந்திரன்', 'பூமராங்', 'காசேதான் கடவுளடா' உள்ளிட்ட பல கமர்சியல் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

இதையடுத்து, ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள காந்தாரி படத்தை தயாரித்து இம்மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார். மேலும், இயக்குநர் ஆர்.கண்ணன், தனது இயக்கத்தில் 2017ல் வெளியாகி வெற்றி பெற்ற 'இவன் தந்திரன்' படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது 'இவன் தந்திரன் 2' என்கிற பெயரில் தயாரித்து இயக்குகிறார்.

இப்படத்தை மசாலா பிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'இவன் தந்திரன்' படத்தில் சக்தி கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக்கும் அவரது நண்பராக ஆர்.ஜே பாலாஜியும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடித்திருந்தனர். பிரபல பொறியியல் கல்லூரியில் ஒரு மோசமான அமைச்சரின் துணையோடு நடக்கும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக இப்படம் உருவாகி இருந்தது.

மக்களால் பரபரப்பாக பேசப்பட்டு, சிறந்த விமர்சனங்களையும் பெற்று அதன் தொடர்ச்சியாக உருவாகும் 'இவன் தந்திரன் 2' வும், அதே விறுவிறுப்பான திரைக்கதையும் கதை களமும் அமைந்துள்ளது. தனது வேலையில் உறுதியாக இருக்கும் ஒருவன் அதை நிறைவேற்ற அவன் என்னைன்ன செய்கிறான் என்பதே இன்றைய இளைஞர்களுக்கான கதையாக அமைந்துள்ளது.

'சிங்கம் 3;, 'வடசென்னை', 'கேஜிஎப்' உள்ளிட்ட படங்களில் இளம் நடிகராக நடித்து பிரபலமான நடிகர் சரண் நாயகனாக நடிக்கிறார். கல்லூரி மாணவரான சஷாங்க் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். நடிகை சிந்து பிரியா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தற்போது ஜெயம் ரவியின் கராத்தே பாபு படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சமுத்திரக்கனி வில்லனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் தம்பி ராமையா, ஜெகன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தற்போது 'இவன் தந்திரன் 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Firewall Breached! The Ritchie Street Geeks are back to hack the game!#IvanThanthiran2 kicks off with a pooja ceremony.Directional @Dir_kannanRMusical @musicthaman@Actorsarann @Sindhupriyaks @sashankgadipudi @KingsleyReddin #ActorJegan @johnsoncinepro pic.twitter.com/rFv8nSIg3M

— C K Ajaykumar,PRO (@ajay_64403) July 8, 2025
Read Entire Article