இளைஞர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு: 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

1 week ago 3

காவேரிப்பாக்கம்,

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர்கள் தமிழரசன். விஜயகணபதி. இவர்கள் இருவரும் கடந்தசில நாட்களுக்கு முன்பு திருமால்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த திருமால்பூர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், அவர்களை ஓரமாக நிற்குமாறு கூறியுள்ளார். இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அடுத்தநாள் சூர்யா, விஜயகணபதி ஆகிய இருவரும் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்துள்ளனர். அப்போது அங்கிருந்த பிரேம்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மீண்டும் சூர்யாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர்.

ஆவேசமடைந்த பிரேம்குமார் அந்த வழியாக வாகனத்திற்கு பெட்ரோல் வாங்கி சென்ற நபரை மடக்கி அவரிடமிருந்த பெட்ரோல் கேனை பிடுங்கி இருவர் மீதும் ஊற்றி தீ வைத்துவிட்டு நண்பர்களுடன் தப்பி சென்றுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தனர். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் தமிழரசன் சிகிச்சை பலனின்றி கடந்த 22-ம் தேதி உயிரிழந்தார். விஜயகணபதிக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பிரேம் குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் வெங்கடேசன் (23), திருமால்பூரை சேர்ந்த மணிகண்டன் (23), நவீன் (21), கீழ்வெண்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (23) உள்ளிட்டோரை கடந்த 20-ந் தேதி கைது செய்து சோளிங்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இளைஞர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பிரேம்குமார், வெங்கடேசன், சதீஷ்குமார், மணிகண்டன், நவீன் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article