சென்னை: பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படும் வேட்டி மற்றும் சேவை திட்டத்திற்காக 4600 மெட்ரிக் டன் நூல் கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: “வரும், 2026 பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி, சேலை பயனாளிகளுக்கு வழங்குவதுடன், முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கும் வழங்கவும், நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, 2026ம் ஆண்டு பொங்கலுக்கு 1 கோடியே, 44 லட்சத்து, 10 ஆயிரம் வேட்டிகள், 1 கோடியே 46 லட்சத்து 10 ஆயிரம் சேலைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் 4,600 மெட்ரிக் டன் நூல் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக ரூ.75 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உற்பத்தி பணிகள் ஜூலை இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இலவச வேட்டி – சேலை திட்டத்திற்காக 4600 மெட்ரிக் டன் நூல் கொள்முதல் செய்ய டெண்டர்: முதற்கட்டமாக ரூ.75 கோடி ஒதுக்கீடு; அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.