இலங்கையில் 1970ல் திருடிய ரூ.37க்கு பன்மடங்காக திருப்பிக் கொடுத்த தொழிலதிபர்: பணம் பெற்ற குடும்பத்தினர் நேரில் சந்தித்து மகிழ்ச்சி

2 months ago 8

கோவை: இலங்கையில் பக்கத்துவீட்டில் திருடிய ரூ.37காக ரூ.3 லட்சம் திருப்பி கொடுத்த தொழிலதிபரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பணம் பெற்றவர்கள் கோவை வந்து அவரை நேரில் சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் வசித்து தேயிலை எஸ்டேட் பணியாளர்களாக சுப்பிரமணியம், எழுவாய் தம்பதி 1970 ஆம் ஆண்டு வீட்டை காலி செய்தபோது உதவிக்காக பக்கத்துவீட்டை சேர்ந்த 10 வயது சிறுவன் ரஞ்சித்தை அழைத்தனர். அங்கு ஒரு அறையில் தலையணைக்கு கீழே ரூ.37.50 காசுகள் இருந்ததை பார்த்த ரஞ்சித் தனது குடும்ப வறுமையின் காரணமாக யாருக்கும் தெரியாமல் அந்த பணத்தை எடுத்து கொண்டார். பின்னர் 1977 ஆம் ஆண்டு 17 வயதில் பிழைப்புக்காக தமிழ்நாட்டிற்கு வந்த ரஞ்சித் பல்வேறு வேலைகள் பார்த்து தற்போது கோவையில் கேட்டரிங் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் பைபிள் படித்து ஏற்பட்ட தாக்கத்தால் திருடிய பணத்தை திருப்பி கொடுக்க முன்வந்த ரஞ்சித் சுப்பிரமணியம், எழுவாய் தம்பதியினர் இறந்துவிட்ட நிலையில் அவர்களுக்கு 3 மகன்கள், மகள் இருப்பதை தெரிந்து கொண்டார் இதை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு இலங்கை சென்ற ரஞ்சித் 1970 ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தை விவரித்து புத்தாடைகளும், திருடிய ரூ.37.50 காசுகளுக்கு ஈடாக 3 குடும்பங்களுக்கும் இலங்கை மதிப்பில் தலா 70,000 வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார். இந்நிலையில் தற்போது கோவை வந்துள்ள சுப்பிரமணியம், எழுவாய் தம்பதியின் பேத்தி பவானி ரஞ்சித்தை சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்தார். எழுவாயின் ஒரே மகளான செல்லம்மாள் குடும்பத்துடன் திருச்சியில் வசித்து வருவதை அறிந்த ரஞ்சித் அவர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் ரூ.70,000 வழங்கி நெகிழ்ச்சி அடைய வைத்தார்.

The post இலங்கையில் 1970ல் திருடிய ரூ.37க்கு பன்மடங்காக திருப்பிக் கொடுத்த தொழிலதிபர்: பணம் பெற்ற குடும்பத்தினர் நேரில் சந்தித்து மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article