இலங்கைக்கு கடத்திய ரூ.4.50 கோடி கஞ்சா, மஞ்சள் பறிமுதல்

2 weeks ago 5

ராமேஸ்வரம்: தமிழக கடல் வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு, பின் சாலை வழியாக நகருக்குள் கொண்டு செல்லப்படுவதாக இலங்கை கடற்படையினர் அந்நாட்டு ராணுவத்தினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலையடுத்து நீர்க்கொழும்பு நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் ராணுவத்தினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான சரக்கு வாகனங்களை சோதனையிட்டதில், 80 பண்டல்களில் 412 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கடத்தலில் ஈடுபட்ட தலைமன்னார் மற்றும் கல்பிட்டியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் புத்தளம் மாவட்டம் நுரைச்சாலையில் வாகன சோதனையின்போது தமிழக கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 1,143 கிலோ மஞ்சளை கைப்பற்றி மதுரங்குளி பகுதியை சேர்ந்த ஒருவரை, அந்நாட்டு ராணுவத்தினர் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.4.50 கோடி ஆகும்.

The post இலங்கைக்கு கடத்திய ரூ.4.50 கோடி கஞ்சா, மஞ்சள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article