திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 5017 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.02 கோடி வங்கி கணக்கில் வரவு

1 day ago 3

*76 பேருக்கு ரூ.48.54 லட்ச மதிப்பிலான செயற்கைகால்கள்

திருவாரூர் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் அரசானது மக்கள் நலன்காக்கும் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில், திருவாரூர் மாவட்டத்தில் 26951 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை 18360 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக கைகால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிப்பு மற்றும் நாள்பட்ட நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வீதம் 2021-2022 ஆண்டில் 4687 பயனாளிகளுக்கு ரூ.9.37 கோடியும் 2022-2023 ஆண்டில் 4904 பயனாளிகளுக்கு ரூ.11.42 கோடியும், 2023-2024 ஆம் ஆண்டில் 5021 பயனாளிகளுக்கு ரூ.11.92 கோடியும், கடந்த ஆண்டில் 5017 பயனாளிகளுக்கு ரூ.7.02 கோடியும், 4ஆண்டுகளில் மொத்தம் ரூ.33.43 கோடி பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு மாதந்தோறும் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்ய மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் கடன்தொகையில் மூன்றில் ஒருபங்காக அதிகபட்சம் ஒரு நபருக்கு ரூ.25000 என கடந்த ஆண்டில் 73 பயனாளிகளுக்கு ரூ.15.29 லட்சம் என, மொத்தம் 4ஆண்டுகளில் ரூ.44.96 லட்சங்கள், பயனாளிகள் கடன் பெறும் வங்கிகளுக்கு மிண்ணனு பட்டுவாடா மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுயதொழில் செய்து தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திகொள்ள பயனுள்ளதாக இத்திட்டம் அமைகிறது.

கைகால் பாதிக்கப்பட்ட, செவித்திறன் குறைபாடுடைய, பார்வைகுறைபாடுடைய மற்றுத்திறனாளிகளை திருமணம் செய்துகொள்ளும் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கும் தம்பதிகள் இருவருமே மாற்றுத்திறனாளிகளாக இருந்தாலும் பயன்பெறும் வகையில் 4 வகையான திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் கீழ் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றவர்களுக்கு ரூ.25000 தொகையும் 8கிராம் தங்க நாணயமும் பட்டப்படிப்பு மற்றும் பட்டயபடிப்பு படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50000 தொகையும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கும் திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டில் ரூ.5.50 லட்சம் என மொத்தம் ரூ.21.25 லட்சங்கள், பயனாளிகளுக்கு 4 ஆண்டுகளில் மொத்தம் ரூ.21.25 லட்சம் மதிப்புள்ள தங்க நாணயங்களும் வழங்கப்பட்டுள்ளது.

சொந்த வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா 57 நபர்களுக்கும் அரசின் இலவச வீடுகட்டும் திட்டத்தின்கீழ் பயனடைய 24 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது.

உரிமைகள் திட்டத்தின்கீழ் களப்பணியாளர்களை கொண்டு கணக்கெடுப்பு செய்யப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத நபர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 515 அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தினகீழ் 76 நபர்களுக்கு ரூ.48.54 லட்ச மதிப்பிலாக செயற்கைகால்களும் வழங்கப்பட்டுள்ளது.

சொந்த வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா 57 நபர்களுக்கும் அரசின் இலவச வீடுகட்டும் திட்டத்தின்கீழ் பயனடைய 24 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது.

உரிமைகள் திட்டத்தின்கீழ் களப்பணியாளர்களை கொண்டு கணக்கெடுப்பு செய்யப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத நபர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 515 அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வருக்கு நன்றி

மாற்றுத்திறனாளிகள் துறையின் மூலம் மாதஉதவித்தொகை மூலம் பயனடைந்துவரும் மாற்றுத்திறனாளி நபர் அவர்கள் தெரிவித்ததாவது.எனது பெயர் தேன்மொழி எனக்கு கணவர் இல்லை. நான் மட்டுமே எனக்கு மாதந்திர செலவு மேற்கொள்ள எனது அண்ணன் வீட்டிலிருந்தே பணம் வரும். அதுவும் ஒரு காலகட்டத்திற்கு மேல் தடைப்பட்டது.

என்னால் மாதந்தோறும் எங்கும் கேட்க முடியவில்லை. இதனால் மிகவும் சிரமப்பட்டேன். இந்த நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்திருந்தேன். எனக்கு கை, கால் முடியாது. அதனடிப்படையில் மாற்றுத்திறனாளித்துறைக்கு விண்ணப்பம் பகிரப்பட்டது.

அங்கு நான் சென்று தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து, உதவித்தொகை முதற்கொண்டு பெற்று வருகிறேன். இப்பொழுது எந்தவித சிரமம் இல்லாமல் உள்ளேன். இவ்வாய்ப்பினை வழங்கிய தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

The post திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 5017 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.02 கோடி வங்கி கணக்கில் வரவு appeared first on Dinakaran.

Read Entire Article