இருமுடியில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீரை தவிர்க்க வேண்டும் - சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அறிவுறுத்தல்

2 months ago 15

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையைக் காண சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இந்த ஆண்டு மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை வருகிற ஜனவரி 14-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, வரும் 15-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.

இதற்கான முன்னேற்பாடுகள் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட உள்ளன. அதன்படி 'ஆன்லைன் முன்பதிவு' அடிப்படையில் 70 ஆயிரம் பேர், 'ஸ்பாட் புக்கிங்' அடிப்படையில் 10 ஆயிரம் பேர் என தினமும் மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்த நிலையில், இருமுடி கட்டி சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள், தங்கள் இருமுடி கட்டில் சாம்பிராணி, கற்பூரம் பன்னீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று தேவசம்போர்டு அறிவுறுத்தி உள்ளது. பக்தர்கள் கொண்டுவரும் பொருட்களில் பெரும் பகுதி வீணாக எரிக்கப்படுவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்திருக்கிறது.  

Read Entire Article