இயக்குனர் சிவா குறித்து அஜித் கூறியதென்ன? - சூர்யா பகிர்ந்த சுவாரசிய தகவல்

3 months ago 15

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தநிலையில், இப்படத்தின் பிறமொழி டப்பிங்கிலும் சூர்யாவின் குரலே ஏ.ஐ தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா மற்றும் கங்குவா படக்குழுவினர் புதுடெல்லியில் படத்திற்கான புரமோஷன் பணியில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

திரைப்படத்தின் இரண்டாம் பாடலான யோலோ பாடல் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூர்யா இரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சூர்யா பட புரமோஷனில் கலந்துகொண்டு பேசியதாவது: நான் சமீபத்தில் நடிகர் அஜித்தை சந்தித்தேன். இப்போது தெரிகிறதா நான் ஏன் சிவாவை விடவில்லை என்று புரிகிறதே எனக் கூறியதாக பேசினார்.

LIVE NOW: In conversation with #Suriya and #Siva as we discuss #Kanguva, and the challenges of creating 2 era's, a two-hero saga with #Ajith, #KarthikSubbaraj's next, #Rolex, #Ghajini2, #Singam4, #IrumbuKaiMaayavi & #Kanguva2. Feedbacks Please :)https://t.co/fNIm9svQ4j

— Himesh (@HimeshMankad) October 22, 2024

இயக்குனர் சிவா நடிகர் அஜித்துடன் தொடர்ச்சியாக வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article