இன்றைய பஞ்சாங்கம்:
தமிழ்: குரோதி வருடம் புரட்டாசி மாதம் 27ம் தேதி சனிக்கிழமை
ஆங்கிலம்: அக்டோபர் மாதம் 13ம் தேதி
நட்சத்திரம்: இன்று அதிகாலை 12.54 வரை திருவோணம் இரவு 11.48 வரை அவிட்டம், பின்பு சதயம்
திதி: இன்று அதிகாலை 4.36 வரை தசமி பின்பு ஏகாதசி
யோகம்: மரண, சித்த யோகம்
நல்ல நேரம்: காலை 8.00 to 9.00
நல்ல நேரம்: மாலை 3.15 to 4.15
ராகு காலம்: மாலை 4.30 to 6.00
எமகண்டம்: மாலை 12.00 to 1.30
குளிகை: மாலை 3.00 to 4.30
கௌரி நல்ல நேரம்: காலை 10.45 to 11.45
கௌரி நல்ல நேரம்: மாலை 1.30 to 2.30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்
ராசிபலன்:
மேஷம்
அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தேகம் பொலிவு பெறும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
ரிஷபம்
கணவன் மனைவிக்கிடையே இருந்த பிணக்குகள் நீங்கும். பணம் கையில் சரளமாக புழங்கும். பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். ஆனாலும், பூர்வீகச் சொத்து, பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டினை விரிவுபடுத்த வங்கிக்கடன் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை
மிதுனம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கடகம்
பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். பண விஷயத்தில சிக்கனமாக இருங்கள். தம்பதிகளிடம் ஒற்றுமை உண்டாகும். மற்றவர்களுக்காக வீடு மனை அடமான விசயத்தில் கையொப்பமிட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
சிம்மம்
பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். பாகப்பிரிவினை சுமுகமாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை
கன்னி
குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். அக்கம் பக்கத்தினர் தொடர்புகள் நன்றாக இருக்கும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
தனுசு
வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். ' பிரபலங்கள் உதவுவார்கள். தடைப்பட்டு வந்த சுபகாரியங்களை துரிதமாக முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது இடம் அல்லது புது வீடு வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்
மகரம்
உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். வீட்டில் வேலையாட்களின் கோபத்தினை காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கும்பம்
மகளுக்கு திருமணம் கூடி வரும். தங்க ஆபரணங்கள் அதிகம் வாங்குவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வசதி, வாய்ப்புகள் கூடும். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். புதிய வாகனத்தை வாங்க பழைய வாகனத்தை விற்று விடுவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மீனம்
முன்கோபத்தை தவிர்த்து விடுங்கள். வேலையாட்களால் உதவிகள் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். வரவேற்பு அதிகரிக்கும். காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம். பெற்றோரை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள். இடுப்பு வலி, மூட்டு வலி வந்துபோகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்