இன்றைய ராசிபலன் - 09.10.24

3 months ago 24

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் புரட்டாசி மாதம் 23-ம் தேதி புதன்கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 1-35 வரை கேட்டை பின்பு மூலம்

திதி: இன்று காலை 08-20 வரை சஷ்டி பின்பு சப்தமி

யோகம்: மரண, அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை: 11.30 - 12.00

நல்ல நேரம் மாலை: 4.45 - 5.45

ராகு காலம் மாலை: 12.00 - 1.30

எமகண்டம் காலை: 7.30 - 9.00

குளிகை காலை: 10.30 - 12.00

கௌரி நல்ல நேரம் காலை: 1.45 - 2.45

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டம்: பரணி,கிருத்திகை

ராசிபலன்

மேஷம்

பரணி, கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு கவலை வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிஷபம்

மாணவர்களின் தங்களின் தேவைகளை பெற்றோர்கள் பூர்த்திசெய்வர். அக்கம் பக்கத்தாருடன் அனுசரனையுடன் செல்லுங்கள். தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பெற்றோரின் ஆசையினை பூர்த்தி செய்வீர்கள். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மிதுனம்

உத்யோகத்தில் தங்களுக்கெதிராக செயல்பட்ட அதிகாரி இடமாற்றம் செய்யப்படுவார். தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கணவன் மனைவி ஒற்றுமை உண்டு. பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. வியாபாரிகளுக்கு வியாபாரம் சிறக்கும். உடல் நலம் சிறப்பாகும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

கடகம்

மாணவர்கள் படிப்பில் முதல் இடத்தை பிடிப்பர். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். காதலர்கள் திருமணத்துக்கு தயாராவர். பணம் நாலாபக்கமிருந்தும் வரும். தம்பதிகளிடையே அன்பு குறையாது. தெரியாத தொழிலில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

சிம்மம்

உத்யோகஸ்தர்களுக்கு தங்களின் வேலையில் நிம்மதி பெருமூச்சுவிடுவீர்கள். எதிர்பார்த்த ஒரு காரியம் நிறைவேறும். தம்பதிகளிடையே விவாதம் வந்து போகும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அரசு வேலைகள் சாதகமாகும். புதிய வாடிக்கையாளர்களின் வருகை மனதிற்கு தெம்பளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உடலில் எலும்புப் பிரச்சினை தீரும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளையினை நிறைவேற்றி நற்பெயரைப் பெறுவர். இழந்த மரியாதையை மீண்டும் பிடித்து விடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

துலாம்

வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். வர வேண்டிய பணம் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. பிரிந்த உறவினர் உங்களை தேடி வருவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

தம்பதிகளிடையே சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அமைதியாக செல்வது நல்லது. பாகப்பிரிவினை நல்லபடியாக நடந்து முடியும். ஒரு சிலர் புகழ் பெற்ற பகுதிக்கு உங்களுடைய கடையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வெளிமாநிலம், அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கடையை விரிவுப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு

உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு குறைவாக இருக்கும். வீடடிற்கு அழகு சேர்க்க கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். சில சமயம் தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மகரம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. பெண்கள் வேலையை எளிதாக்க புதிய ரக பொருட்களை உபயோகப்படுத்துவர். பொறுப்பான வேலையாட்கள் பணியில் வந்து சேருவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கும்பம்

பணமும் புகழும் இருந்தாலும் பந்தா செய்வது தங்களிடம் இல்லாத குணம். இதனாலேயே அதிக மக்கள் செல்வாக்கினை பெற்றவர் நீங்கள். சுபச் செலவுகள் அதிகமாகும். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். விற்பனை கூடும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்:பச்சை

மீனம்

நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். பெரியர்களின் ஆசி கிட்டும். அரசியலில் நாட்டம் கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். அலுவலக விசயமாக வெளியூர் பயணம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். நண்பர்கள் கைக் கொடுப்பர். உடல் நலம் தேறும். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். விற்பனை கூடும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்

 

Read Entire Article