இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம்

2 months ago 9

 

ஈரோடு, நவ. 23: தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2025ன் ஒரு பகுதியாக கடந்த 16, 17ம் தேதிகளில் 2 நாள்கள் இந்த முகாம் நடைபெற்றது. தற்போது 2வது வாரமாக இன்றும் (23ம் தேதி), நாளையும் (24ம் தேதி) வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2,222 வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும். இம்முகாமில், பொதுமக்களிடமிருந்து படிவங்களை பெறவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள voters.eci.gov.in எனும் இணையதள முகவரியிலும், Voter Helpline App என்ற செல்போன் செயலி மூலமாகவும் வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான சேவைகளை பெற தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதியான வாக்காளர்களும் உரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் சேர்த்தல், நீக்குதல் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சேவைகளையும் இச்சிறப்பு முகாமின் மூலமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

The post இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article