மாதவரம்: பேருந்து தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, அதில் 7 வழித்தட எண்கள் மாறுதல் செய்து, அதே வழித்தடத்தில் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மா.போ. கழகம் பயணிகள் நலன் கருதி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது.
மேலும், ஒவ்வொரு பேருந்து வழித் தடத்திற்கும் ஒவ்வொரு தட எண் வழங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, 7 வழித்தட எண்களை கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ளவாறு மாறுதல் செய்து, அதே வழித்தடத்தில் மே 1ம் தேதி (இன்று) முதல் இயக்கப்பட உள்ளது.மாற்றப்பட்ட பேருந்து தட எண்கள் விவரம்
The post இன்று முதல் 7 பேருந்துகளின் வழித்தட எண்கள் மாற்றம்: மாநகர் போக்குவரத்துக்கழகம் தகவல் appeared first on Dinakaran.