சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில் இதுவரை 13 சாட்சிகள், மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்று உயர் நீதிமன்றத்தில் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில், ”கைதான ஞானசேகரன் மீதான பழைய திருட்டு, வழிப்பறி என மொத்தமாக உள்ள 35 வழக்குகளில், 5 வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அடையாறு பகுதியில் சாலையோர உணவகத்தை நடத்தி வரும் ஞானசேகரன் என்ற நபரைக் கைது செய்தனர்.
காவல்துறையின் விசாரணை தீவிரமடைந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த சில விவரங்கள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகின.புகார் அளித்த மாணவியின் பெயர், பாடப்பிரிவு, முகவரி உள்ளிட்டவை எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றிருந்த நிலையில், சமூக ஊடகங்களிலும் , வாட்ஸாப்பிலும் இந்த எஃப்.ஐ.ஆர் பகிரப்பட்டது.
இந்தநிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இக்குழுவிடம் வழக்கின் ஆவணங்களை கோட்டூர்புரம் மகளிர் போலீசார் ஒப்படைத்தனர். எஃப்.ஐ.ஆர் வெளியானது தொடர்பாக சென்னை கிழக்கு சைபர் கிரைம் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை தேவையற்றது என்று டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 9 வழக்குகளில் விடுதலை ஆகியுள்ளார். மற்ற வழக்குகளில் விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, இவ்வழக்கில் சிபிஐ விசாரணை தேவையற்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது
The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை தேவையற்றது: டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.