இன்று அலங்கார நல்லூரில் ஜல்லிக்கட்டு.!

4 hours ago 4

மதுரை: மதுரை மாவட்ட கிராமங்களில் உலகப்புகழ் பெருமைக்குரியதாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இருக்கிறது. சித்திரை நாளில் அழகருக்கு அலங்காரம் செய்த இப்பகுதி அலங்காரநல்லூர் என்றிருந்து, காலப்போக்கில் அலங்காநல்லூர் ஆனது என்கின்றனர். இவ்வூரின் பல நூற்றாண்டு பழமைக்குரிய இங்கிருக்கும் முனியாண்டி கோயில் பகுதியில்தான் அழகருக்கு அலங்காரம் நடந்திருக்கிறது. தேனூர் ஆற்றில் இறங்கும் அழகரை மதுரை வைகையாற்றில் இறங்கும் விதமாக திருமலைநாயக்கர் பிற்காலத்தில் மாற்றியமைத்த காலம் வரை, இங்குதான் அழகருக்கு அலங்காரம் நடந்தது.

பழம்பெருமைக்குரிய அலங்காநல்லூரில் தை மாதம் நடக்கும் ஜல்லிக்கட்டு தமிழர் வீரவிளையாட்டை காட்டுவதோடு, இவ்வூர் பகுதிகளில் இன்றும் எஞ்சி இருக்கும் கிராமிய கலாச்சாரத்தை அறிவிக்கும் ஒரு பண்பாட்டு அடையாளத்தையும் உலகின் ‘காதுகளுக்கு’ சொல்லிக் கொண்டிருக்கிறது. வீரம் விளைஞ்ச பூமியான, மதுரை கிராமங்கள் பொங்கல் நாள் துவங்கி கடந்த 3 நாட்களாக ஜல்லிக்கட்டு கொண்டாட்டத்தில் குதூகலம் கண்டுகொண்டிருக்கிறது.

அம்புட்டுத்தாங்கோ!

The post இன்று அலங்கார நல்லூரில் ஜல்லிக்கட்டு.! appeared first on Dinakaran.

Read Entire Article