40 வது பிறந்தநாளை கொண்டாடும் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னைவிட ஒருவரை சிறந்தவராக பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ சமகால கால்பந்தாட்ட வரலாற்றை இவரது பெயரை தவிர்த்துவிட்டு எழுதிவிட முடியாது. அந்தளவுக்கு தனக்கென தனித்துவமான ஆட்டத்தையும், உலகம் முழுவதும் திரளான ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார்.
எதிரணி வீரர்களை ஏமாற்றி பந்தை கடத்தும் திறன் தலைகீழாக சுழன்று அடிக்கும் சைக்கிள் கிக் கோல், தலையால் முட்டி பந்தை வலைக்குள் தள்ளி கோலாக மாற்றும் திறன் என ஒவ்வொரு வடிவமும் ரசிகர்கள் அவரை கொண்டாட வைக்கிறது. கால்பந்தாட்டத்தில் கவ்ரவம் மிக்க விருதை 5 முறை வென்றுள்ள போர்ச்சுகல் வீரரான ரொனால்டோ கடந்த ஆகஸ்ட் 2002 ஆம் ஆண்டு தனது தொழில் முறை வாழ்க்கையை தொடங்கி இன்றுவரை கோலூன்றி வருகிறார்.
இளைஞர்களுக்கு மத்தியில் 40 வயதிலும் பம்பரமாக சுழன்று கோல்களை அடித்து பலரையும் வியக்கவைத்து வருகிறார். தற்போது சவதியின் அல் நிசார் அணிக்காக ஆடிவரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று முன்தினம் ஆசிய சாம்பியன்ஸ் லீக்கில் அல் நாசர் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 2 கோள்களை அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இந்த 2 கோல்கள் மூலம் 923 கோல்களை அடித்த பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றிருக்கிறார்.
இதற்கிடையே இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் ரொனால்டோ தான் எதிலும் குறைந்தவன் அல்ல என்பது போல மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்களை சுட்டிக்காட்டாமல் பெருமையுடன் தம்மை பற்றி குறிப்பிட்டார். உலகத்திலேயே சிறந்த கால்பந்து வீரர் நான்தான் என்றும் ஏன் கால்கள் சொல்லும் வரை நான் கால்பந்து விளையாடுவேன் என்று தெரிவித்தார் ரொனால்டோ. இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடும் ரொனால்டோவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
The post இன்று 40-வது பிறந்த நாளை கொண்டாடும் ரொனால்டோ: வேறு யாரையும் சிறந்தவராக பார்க்கமுடியவில்லை என பெருமிதம் appeared first on Dinakaran.