இன்ஜினியரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை நெருங்குகிறது

2 hours ago 2

சென்னை: நடப்பாண்டு இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை இன்னும் 2 நாட்களில் 2 லட்சத்தை தொடவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில் 2025-26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவானது கடந்த 7ம் தேதி தொடங்கியது. www.tneaonline.org என்ற இணையதளம் மூலமாக மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.

விண்ணப்ப பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே 14,462 பேர் விண்ணப்ப பதிவு செய்திருந்தனர். நேற்று மாலை நிலவரப்படி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 491 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும், 70 ஆயிரத்து 584 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இன்ஜினியரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை நெருங்குகிறது appeared first on Dinakaran.

Read Entire Article