மயிலாடுதுறை, மே 19: மயிலாடுதுறையில் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு ஆதரவாகவும், பாராட்டுத் தெரிவித்தும் மயிலாடுதுறை மாவட்ட பாஜக சாா்பில் தேசியக் கொடியை ஏந்தி பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமை தாங்கினார். மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் தொடங்கிய பேரணி காந்திஜி சாலை, காமராஜர் பஸ் நிலையம் வழியாக மணிக்கூண்டு வந்தடைந்தது.
பேரணியில் மத்திய அரசை பாராட்டியும் ராணுவ வீரர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் அகோரம், முன்னாள் மாவட்டத் துணைத் தலைவர் விஜயாலயன், மாவட்ட பொருளாளர் சித்ரா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் விஜய பிரகாஷ், மாவட்ட பொதுச் செயலாளர் பாரதி கண்ணன், முன்னாள் நகர தலைவர் வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரணியையொட்டி டிஎஸ்பி பாலாஜி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்து தேசிய கொடி ஏந்தி பேரணி appeared first on Dinakaran.