நாகப்பட்டினம், மே 19: நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரோந்து பணிக்காக இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் தரம் மற்றும் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக ஆயுதப்படை மைதானத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அந்த வாகனங்களை எஸ்பி ஆய்வு செய்தார்.
அதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது. எஸ்பி அருண் கபிலன் தலைமை வகித்தார். மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், சாராயம், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் எஸ்பி பேசினார்.
பின்னர் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடந்தது. ஆய்வு கூட்டத்தின் முடிவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஆளினர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை எஸ்பி வழங்கினார்.
The post நாகப்பட்டினத்தில் எஸ்பி தலைமையில் காவல்துறை ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.