கரூர், மே 19: கரூர் மாவட்ட அனைத்து சங்க நிர்வாகிகள் கூட்டமைப்பு சார்பில் மே 20ல் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கரூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு தொமுச மாவட்ட செயலாளர் அப்பாசாமி தலைமை வகித்தார். அனைத்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், மே 20ம்தேதி மாலை 4 மணியளவில் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிப்பது, அன்று மாலை 5 மணியளவில் கரூர் தலைமை தபால் நிலையம் அருகே 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு ஆலோசனை appeared first on Dinakaran.