*புதிய பாலம் கட்டித் தர விவசாயிகள் கோரிக்கை
குளித்தலை : கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த இனுங்கூர் ஊராட்சி பகுதியில் உள்ளது. மாயனூரில் இருந்து பிரிந்து சித்தலவாய், மகாதானபுரம், வீரவல்லி, வைபுதூர், கருங்காப்பள்ளி கணக்கப் பிள்ளையூர், மேலப்பட்டி, வலையப்பட்டி, பணிக்கம் பட்டி நடுப்பட்டி, கணேசபுரம், பங்களாபுதூர்.
இனுங் கூர் வழியாக நச்சலூர் புரசம்பட்டி, நெய்தலூர். சோம்பரசன் பேட்டை வரை செல்லும் கட்டளை மேட்டு வாய்க்கால் செல்கிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் சுரும்பு, நெல், வாழை பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காமராஜர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட இந்த கட்டனை மேட்டு வாய்க்கால் பகுதியில் இனுங்கூர் அருகே வாகன போக்குவ ரத்திற்காக குறுக்கே பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது வலுவிழந்த நிலையில் எந்நேரமும் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது. தகவலறிந்த எம்எல்ஏ மாணிக்கம், அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.
திடீரென இடிந்து விழுந்த கட்டளை மேட்டு வாய்க்கால் பாலத்தை எம்.எல்.ஏ மாணிக்கம் நேரில் ஆய்வு செய்தார். அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு தற்காலிகமாக விவசாய இடுபொருள் கொண்டு செல்வதற்கு பாலத்தை சரி செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இந்நிலை கருதி மாவ ட்ட ஆட்சியர் ஆற்று பாதுகாப்பு பொதுப்பணி நீர்வளத்துறை அதிகாரிகள் கள ஆய்வு கண்டு உடனடியாக இனுங்கூர் பகுதி வழியாக செல்லும் பழுதடைந்த நிலையில் எந்த நேரமும் ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்கால் பாலத்தை புதிதாக கட்டித் தரவேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தற்காலிகமாக போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் பாலத்தில் பாதை அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து கனரக வாகனங்கள் செல்லாமல் குறைந்த அளவே வாகனங்கள் சென்று வந்தன.
தற்போது மீண்டும் பாலத்தின் நடுப்பகுதி இடிந்து நிலையில் இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மீண்டும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரடி களஆய்வு செய்து மீண்டும் புதிய பாலம் கட் டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
The post இனுங்கூரில் பழமையான கட்டளை மேட்டு வாய்க்கால் பாலம் நடுப்பகுதி இடிந்ததால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.