சென்னை: “இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தொடங்கப்படவிருந்த 6 கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றம் ஒருசில வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 6 கல்லூரிகளும் இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும்” என்று அந்தத் துறையின் அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் இன்று (மார்ச் 19) கேள்வி நேரத்தின்போது, திருத்தணி எம்.எல்.ஏ. எஸ்.சந்திரன் பேசும்போது, “திருத்தணி தொகுதியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மகளிர் கலைக் கல்லூரி அமைக்கப்படுமா?” என கேள்வி எழுப்பினார்.அதற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பதிலில், “திமுக அரசு பதவி ஏற்றதும் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 10 கல்லூரிகள் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதை தடுக்கும் நோக்கில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு நான்கு கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டது.