இந்தியில் ரீமேக்காகும் 'பேபி' - கதாநாயகனாக பிரபல நடிகரின் மகன்?

2 hours ago 2

சென்னை,

கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று பேபி. விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் வைஷ்ணவி சைதன்யா கதாநாயகியாக நடித்திருந்தார். எஸ்கேஎன் தயாரிப்பில் சாய் ராஜேஷ் இயக்கிய இப்படம் சமீபத்தில் நடைபெற்ற பிலிம்பேர் சவுத் 2024 விருதுகளில் எட்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 5 விருதுகளை அள்ளியது.

இந்நிலையில், இப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆனந்த் தேவரகொண்டா நடித்த கதாபாத்திரத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் இர்பான் கானின் மகன் பாபில் கான் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

கதாநாயகி இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், கிருத்தி ஷெட்டியிடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பேபி படத்தை இயக்கிய அதே இயக்குனர் சாய் ராஜேஷ் இப்படத்தையும் இயக்க உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்கப்படுகிறது.

Read Entire Article