இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு

3 months ago 15

புனே,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தொடக்க டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்திய அணி வெறும் 46 ரன்னில் சுருண்டு அதிர்ச்சிக்குள்ளானது. உள்நாட்டில் இந்தியாவின் மோசமான ஸ்கோர் இதுதான். தொடர்ந்து 2-வது இன்னிங்சில் சர்ப்ராஸ் கானின் சதம் (150 ரன்கள்), விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் அதிரடி ஜாலத்தால் (99 ரன்கள்) இந்திய அணி எப்படியோ இன்னிங்ஸ் தோல்வி ஆபத்தில் இருந்து தப்பித்து 107 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை நியூசிலாந்து எளிதில் எட்டிப்பிடித்தது.

இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேவில் இன்று தொடங்குகிறது. சரிவில் இருந்து வலுவாக மீண்டு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் இந்திய அணி 2-வது டெஸ்டில் இன்று களம் காணுகிறது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், சர்ப்ராஸ்கான், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப்.

நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), டிவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளன்டெல், கிளென் பிலிப்ஸ், டிம் சவுதி, மிட்செல் சான்ட்னெர், அஜாஸ் பட்டேல், வில்லியம் ஓ ரூர்கே.

Read Entire Article