சென்னை: தீவிரவாத தாக்குதல் இனியும் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தானை மோடி இல்லாமல் ஆக்கிவிடுவார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் வெற்றி கண்ட வீரர்களுக்கும், வெற்றிக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக பாஜக சார்பில் ‘மூவர்ண கொடி பேரணி’ சென்னை புதுப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.