இந்தியாவில் அதிக புவிசார் குறியீடுகள் பெற்றுள்ள மாநிலங்களில் 2வது இடத்தில் தமிழ்நாடு!

19 hours ago 1

சென்னை: குறிப்பிட்ட ஊரில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு, அந்த ஊரின் புகழ், மண் சார்ந்த குணாதிசியங்கள் கொண்டுள்ள பொருட்களுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம் என்பது புவிசார் குறியீடாகும். அதனடிப்படையில் கும்பகோணம் வெற்றிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில் பண்ருட்டி பலாப்பழம், முந்திரி, புளியங்குடி எலுமிச்சைப்பழம், விருதுநகர் சம்பா வத்தல், செட்டிகுளம் சின்ன வெங்காயம், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி ஆகிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் சின்ன வெங்காயத்திற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக புவிசார் குறியீட்டிற்காக விண்ணப்பித்து விவசாயிகள் நீண்ட நாட்கள் காத்திருந்தனர்.

அந்த வகையில் செட்டிகுளம் சின்ன வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. அதேபோல் மேலும் சில பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலையில் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்றுள்ள பொருட்களின் எண்ணிக்கை 69ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரபிரதேசத்தில் 79 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ள நிலையில், 2வது அதிகமான புவிசார் குறியீடுகளை பெற்றுள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. புவிசார் குறியீடு பெற்றுள்ள பொருட்களை நேரடியாக வெளிநாடுகளுக்கு வியாபாரம் ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .

The post இந்தியாவில் அதிக புவிசார் குறியீடுகள் பெற்றுள்ள மாநிலங்களில் 2வது இடத்தில் தமிழ்நாடு! appeared first on Dinakaran.

Read Entire Article