நியூயார்க்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று விவாதம் நடைபெற உள்ளது. ஐக்கிய நாடுகள் மாமன்ற பாதுகாப்புக் கவுன்சிலுக்கு தற்போது கிரீஸ் நாடு தலைமை வகிக்கிறது. பாகிஸ்தான் வேண்டுகோளை ஏற்று பதற்ற நிலை பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடத்தவுள்ளது. பஹல்காம் சுற்றுலா பயணிகள் 26 பேர் ஏப்.22ம் தேதி தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக கூறி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
The post இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம்: ஐ.நா.வில் இன்று விவாதம் appeared first on Dinakaran.