இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம்: சீனா சொல்வது என்ன?

9 hours ago 3

பீஜிங்,

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் தொட்டுள்ளது. எல்லையில் அத்துமீறி டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் பதிலடி கொடுத்து வருகிறது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் உச்ச கட்ட உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே வெடித்துள்ள மோதல் சர்வதேச அளவில் உன்னிப்பக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தை தணிக்க வேண்டு என்று ஐக்கியநாடுகள் அவை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு நெருக்கமான நாடாக அறியப்படும் சீனா, என்ன மாதிரியான நிலைப்பாடு எடுக்கும் என்று அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான்  பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

"நாங்கள் இந்தியா பாகிஸ்தான் இரு தரப்பிலும் அமைதியும், சமாதானமும் ஏற்பட அதிக ஆர்வம் காட்டுகிறோம். சர்வதேச சட்டங்கள், ஐ.நா. சாசனம், அமைதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இரு நாடுகளும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். நிலைமையை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். தற்போதைய பதற்றங்களை தணிப்பதில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க சர்வதேச சமூகங்களுடன் இணைந்து செயலாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்' இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Read Entire Article