புதுடெல்லி,
இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக போர் காரணமாக இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் இந்தியா இடையிலான விமான சேவையை 'ஏர் இந்தியா' நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது.
இந்த நிலையில், தற்போது போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள சூழலில், மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதன்படி இந்தியா-இஸ்ரேல் இடையே வரும் மார்ச் 2-ந்தேதி முதல் 'ஏர் இந்தியா' விமான சேவை தொடங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இதே போல், ஏர் பிரான்ஸ், லுப்தான்சா, பிரிட்டிஷ் ஏர்வேஸ், ரயானேர் உள்ளிட்ட விமான நிறுவனங்களும் இஸ்ரேல் நாட்டுடனான விமான சேவையை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.