![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/24/35571129-untitled-1.webp)
சென்னை,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்று வரும் டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி நாளை சென்னையில் நடக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி நடைபெறுவதை ஒட்டி சென்னையில் நாளை மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
விக்டோரியா ஹாஸ்டல் சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக இயக்கப்படும், பாரதி சாலையிலிருந்து பெல்ஸ் சாலை செல்ல அனுமதிக்கப்படும். குடியரசு தின ஏற்பாட்டின் காரணமாக நேப்பியர் பாலத்தில் இருந்து கண்ணகி சிலை வரை சாலைகள் மூடப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது .