மும்பை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த டி20 தொடரில் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி 6-ம் தேதியும், 2-வது போட்டி 9-ம் தேதியும் 3-வது மற்றும் கடைசி போட்டி 12-ம் தேதியும் நடைபெற உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் பொருட்டு நடைபெறும் இந்த தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிர முனைப்புடன் களமிறங்க உள்ளன.