இந்தியா - இங்கிலாந்து 2வது ஒருநாள் போட்டி; எரியாத மின்விளக்கு - விளக்கம் கேட்ட அரசு

3 months ago 9

கட்டாக்,

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 305 ரன் இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது கட்டாக் மைதானத்தில் உள்ள மின்விளக்கு பழுதானது. இதன் காரணமாக ஆட்டம் சுமார் 35 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து விரிவான விளக்கம் அளிக்க ஒடிசா கிரிக்கெட் வாரியத்திற்கு ஒடிசா அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Read Entire Article