பணியிடங்கள் விவரம்
ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (ஏர் டிராபிக் கன்ட்ரோல்): 309 இடங்கள் (பொது-125, பொருளாதார பிற்பட்டோர்-30, ஒபிசி-72, எஸ்சி-55, எஸ்டி-27). சம்பளம்: ரூ.40,000- ரூ.1,40,000. வயது: 25.05.2025 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: இயற்பியல் மற்றும் கணிதம் பாடப்பிரிவை முக்கிய பாடமாகக் கொண்டு பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். போதுமான அளவு ஆங்கில அறிவு பெற்றிருக்க வேண்டும்.
இந்திய விமான நிலையம் ஆணையத்தால் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு கட்டணம் ரூ.1000/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
www.aai.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.05.2025.
The post இந்திய விமான நிலைய ஆணையத்தில் 309 ஜூனியர் எக்சிக்யூட்டிவ்ஸ் appeared first on Dinakaran.