பணி: லெப்டினென்ட் JAG Entry Scheme (35th Law Graduates Course). மொத்த காலியிடங்கள்: 8 (ஆண்கள்-4, பெண்கள்-4).
வயது: 01.07.2024 தேதியின்படி 21 முதல் 27க்குள்.
தகுதி: குறைந்தது 55% மதிப்பெண்களுடன் எல்எல்பி பட்டம் பெற்று பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த 5 வருட சட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் முதுநிலை சட்டப்படிப்புக்கான (LLM)-CLAT- 2024 நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப் பணிக்கான நேர்முகத் தேர்வின் போது இளநிலை சட்டப்படிப்பு சான்றிதழ்களுடன் CLAT நுழைவுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
எஸ்எஸ்பியால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பெங்களூரு, போபால், அகமதாபாத் ஆகிய மையங்களில் நேர்முகத்தேர்வு நடைபெறும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரங்கள் பயிற்சியளிக்கப்படும். பின்னர் 6 மாதங்கள் இந்திய ராணுவத்தின் சட்டப்பிரிவில் பயிற்சியளிக்கப்படும். இப் பயிற்சி அக்.2025ல் தொடங்கும். பின்னர் லெப்டினென்ட் அந்தஸ்தில் ராணுவ வழக்கறிஞராக பணியமர்த்தப்படுவர்.
www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (28.11.2024).
The post இந்திய ராணுவத்தில் சட்டம் படித்தவர்களுக்கு வேலை appeared first on Dinakaran.