ரூ.213 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனை பிப்.28ம் தேதி திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

2 hours ago 1

சென்னை: சென்னை கொளத்தூரில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காக சென்னை பெருநகர் வளர்ச்சி குழும நிதியிலிருந்து ரூ.84.17 கோடி நிதியை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் வழங்கினர். இதன் பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் 860 படுக்கை வசதிகள் உள்ளன. இம்மருத்துவமனைக்கு கூடுதலாக 102 மருத்துவர்கள், 236 செவிலியர்கள், 79 மருத்துவம் சாரா பணியாளர்கள், 20 அமைச்சு பணியாளர்கள், 126 பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் 240 தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 803 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். ரூ.213 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 28ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா, சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post ரூ.213 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனை பிப்.28ம் தேதி திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Read Entire Article