இந்திய பங்கு சந்தையில் ரூ.6.80 லட்சம் கோடி இழப்பு: ராகுல் காந்தி கவலை

3 months ago 13

புதுடெல்லி: இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.இதனால் முதலீட்டாளர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். இன்னும் சில முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை வெளியே எடுக்க தொடங்கியுள்ளனர்.நேற்று முன்தினம் ஆரம்பத்தில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் லேசான உயர்வுடன் துவங்கின. ஆனால், சிறிது நேரத்திலேயே முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்ததால், சந்தை கரடியின் பிடியில் சிக்கியது. இதனால், முதலீட்டாளர்கள் கிட்டத்தட்டரூ.6.80 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை சந்தித்தனர்.

இந்த நிலையில், காங்கிரசின் ஊடகம் மற்றும் விளம்பர துறையின் தலைவர் பவன் கேராவுடன் தொலைபேசியில் பேசிய வீடியோவை ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில்,இந்திய பங்கு சந்தையை ஆபத்தின் இடம் என்று விமர்சித்தார். சில்லறை முதலீட்டாளர்களைப் பாதுகாக்க புதுமையான வழிகளை உருவாக்குமாறு கட்சித் தலைவர்களை வலியுறுத்தினார். சில்லறை முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு தகவல் தொடர்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாக இருக்க விருப்பம் தெரிவித்த காந்தி, நான் அதில் ஈடுபட விரும்பினால், எப்படி என்று சொல்லுங்கள், என்று கேராவிடம் ராகுல் காந்தி கேட்டு கொண்டார்.

The post இந்திய பங்கு சந்தையில் ரூ.6.80 லட்சம் கோடி இழப்பு: ராகுல் காந்தி கவலை appeared first on Dinakaran.

Read Entire Article