சென்னை: பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவலின்படி தமிழகத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அதற்கு தகுந்தாற்போல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் அதிகமான தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பயணம் செய்யும் பொழுது தண்ணீர் பாட்டில் உடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒஆர்எஸ் கரைசல் வைத்து அவ்வப்போது பருக வேண்டும். தர்பூசணி ஆரஞ்சு பழம், கிரேப்ஸ் உள்ளிட்ட பழங்களை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இறுக்கமான ஆடையை அணியாமல் இருக்க வேண்டும். வெளியில் செல்லும் பொழுது குடை, தொப்பி உள்ளிட்டவை அணிய வேண்டும். முடிந்த அளவுக்கு வெளியே செல்லாமல் வீட்டில் இருப்பது மிகவும் நல்லதாகும்.
குழந்தைகள் , கர்ப்பிணி பெண்கள் உடல் உபாதைகள் உள்ள நபர்கள், இதய நோய் உள்ள நபர்கள் வெப்பம் தொடர்பான உடல் உபாயங்கள் ஏற்படும் எனவே அவர்கள் பகல் நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மதுபானம், டீ, காபி உள்ளிட்டவை குடிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். நிறுத்திய வாகனத்தில் குழந்தைகள், வளர்ப்பு பிராணிகளை விட்டு செல்வது தவிர்க்க வேண்டும். ஸ்ட்ரோக் அல்லது உடல் அதிக வெப்பத்தை எட்டியது உள்ளிட்ட காரணத்தினால் மயக்கம் அடைந்தால் உடனடியாக 108க்கு அழைக்க வேண்டும்.
The post அடுத்த 4 நாட்களுக்கு வழக்கத்தை விட வெப்பம் அதிகம் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில போகாதீங்க: மக்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.