கோவை: கோவை கணபதி மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்த 25 வயதான இளம்பெண் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கும், கோவையை சேர்ந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. என்னை வேலைக்கு அனுப்பி பணம் கேட்டு டார்ச்சர் செய்து வந்தார். நான் கர்ப்பமாக இருந்த போது மாடி படி ஏறி இறங்க வைத்து கருவை கலைக்க வைத்தார். என் கணவர் மது போதையில் நீ உன் தாயார் வீட்டிற்கு சென்று பணம், நகை வாங்கி வர வேண்டும் என கூறி என்னை கிரிக்கெட் பேட்டால் அடித்தார்.
என் மாமியாருடன் கள்ளத்தொடர்பில் இருந்த ஒருவர், எனக்கு வாட்ஸ் அப் மூலம் செக்ஸ் வீடியோக்களை அனுப்பினார். என்னை மன ரீதியாக வேதனையடைய செய்தார். நான் குளித்து விட்டு துணி மாற்றிய போது அவர் மறைந்திருந்து பார்த்தார். இதை என் கணவரிடம்கூறிய போது அவர் அப்படித்தான் இருப்பார். அட்ஜஸ்ட் பண்ணிப்போ என்று சொன்னார். கணவருடன் அன்னியோன்யமாக இருந்த வீடியோவை எனக்கு தெரியாமல் கணவர் எடுத்து வைத்துள்ளார். அவர் அம்மா வீட்டிற்கு சென்று நகையும், பணமும் வாங்கிக் கொண்டு வா, இல்லையென்றால் இந்த ஆபாச போட்டோக்களை வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய வலைதளங்களில் பதிவு செய்து விடுவேன் என மிரட்டுகிறார்.
என்னை நிர்வாணப்படுத்தி முட்டி போட வைத்து பார்த்து சிரிக்கிறார். மேலும் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு உள்ளது. அவர்களை வீட்டிற்கு வரவழைத்து எனது அறையில் உல்லாசமாக இருக்கிறார். இதை நான் கண்டித்த போது என்னை மிரட்டுகிறார்கள். என் சம்பளத்தை வாங்கி வைத்து கொண்டு என் கணவரும், அவர் தாயும் என்னை உடல், மன ரீதியாக துன்புறுத்தி வருகிறார்கள். அவர்களிடம் உரிய விசாரணை மேற்கொண்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.
The post ஆபாச போட்டோ வெளியிடுவதாக கிரிக்கெட் வீரர் செக்ஸ் டார்ச்சர் இளம்பெண் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.