கறம்பக்குடி, பிப்.24: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனி கடை முக்கம் பகுதியில் வசித்து வருபவர் ராஜ பாலமுருகன். இவரது மகள் பெயர் தாரா (நான்கு வயது). இவர் அனுமார் கோவில் தொடக்கப்பள்ளி அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் பயின்று வருகிறார்.இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு கரம்பக்குடி பேரூராட்சி மன்ற தலைவர் முருகேசன் வேண்டுகோளுக்கு இணங்க மும்மொழி கொள்கையை எதிர்க்கும் விதமாக இந்தியை திணிக்காதே என்றும், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனே வழங்கிடு என்றும் உள்ளிட்ட வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி கையில் பிடித்தவாறு கறம்பக்குடி முக்கிய பகுதிகளில் குழந்தை தாரா வலம் வந்தது. மேலும் அப்போது அங்கு அங்கன்வாடி குழந்தை தாராவிடம் ஒரு சிலர் கேட்டபோது இந்தியை திணிக்காதே என்றும் இந்தியை திணிக்க தமிழ்நாட்டில் கூடாது என்றும் கையை உயர்த்தி தாரா கூறியது கூடியிருந்தவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த இச்சம்பவம் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.
The post இந்தி திணிப்புக்கு எதிராக பதாகையுடன் வலம் வந்த அங்கன்வாடி குழந்தை appeared first on Dinakaran.