
8-ம் தேதி (செவ்வாய்)
* சர்வ ஏகாதசி
* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், திருவாரூர் தியாகராஜர், மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் தலங்களில் தேரோட்டம்
* சென்னை மல்லீஸ்வரர், நெல்லை நெல்லையப்பர் பவனி
* கீழ்நோக்கு நாள்
9-ம் தேதி (புதன்)
* சுபமுகூர்த்த நாள்
* சென்னை கபாலீஸ்வரர், குற்றாலநாதர் கோவிலில் தேரோட்டம்
* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் பூம்பாவையை உயிர்ப்பித்தல், அறுபத்து மூவருடன் பவனி
* வாமன துவாதசி
* கீழ்நோக்கு நாள்
10-ம் தேதி (வியாழன்)
* நெல்லையப்பர் பாண்டிய மன்னனுக்கு செங்கோல் கொடுத்த காட்சி
* சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் விழா
* பழனி முருகன் திருக்கல்யாணம், இரவு வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதி உலா
* கீழ்நோக்கு நாள்
11-ம் தேதி (வெள்ளி)
* பங்குனி உத்திரம்
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்-ரெங்கநாதர் திருக்கல்யாணம்
* பழனி முருகன் கோவில், திருப்புல்லாணி ஜெகநாத பெருமாள் கோவிலில் தேரோட்டம்
* மேல்நோக்கு நாள்
12-ம் தேதி (சனி)
* பவுர்ணமி
* ராமகிரி கல்யாண பெருமாள் கோவில் தேரோட்டம்
* திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல்
* சமநோக்கு நாள்
13-ம் தேதி (ஞாயிறு)
* சென்னை கேசவ பெருமாள் விழா தொடக்கம்
* ஒழுமைமங்கலம் மாரியம்மன், கோவில்பட்டி பூவண்ணநாதர் தலங்களில் தேரோட்டம்
* மதுரை பிரசன்ன வெங்கடேசர் கள்ளர் திருக்கோலம்
* சமநோக்கு நாள்
14-ம் தேதி (திங்கள்)
* தமிழ் புத்தாண்டு, விஷு புண்ணிய காலம்
* திருச்சி உச்சிப் பிள்ளையாருக்கு பாலாபிஷேகம்
* மதுரை மீனாட்சி வைர கிரீடம் சாற்றல்
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி தெப்பத்தில் எழுந்தருளல்
* திருச்செந்தூர் சண்முகர் அன்னாபிஷேகம்
* சமநோக்கு நாள்.