இந்த வருட தீப திருவிழாவில் மலை உச்சியில் தீபம் எரியும்.. எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெறும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி!!

2 months ago 7

சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் இந்த ஆண்டும் திட்டமிட்டபடி தீபம் ஏற்றப்படும் என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் 2ம் நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கேள்வி பதில் நேரத்தின் போது, திருவண்ணாமலை தீபத் திருவிழா ஏற்பாடு தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் இந்த ஆண்டும் திட்டமிட்டபடி தீபம் ஏற்றப்படும்.

எந்தவித சிறு அசம்பாவிதமும் இல்லாமல் தீபத் திருவிழாவை நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 350 கிலோ எடைகொண்ட கொப்பறை, 450 கிலோ நெய் மலை மீது எடுத்துச் செல்லப்படும். மலை உச்சிக்கு கொப்பரை, நெய்யை கொண்டு செல்வோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சூழ்நிலைகளுக்கு ஏற்றார்போல மனித சக்திகளை பயன்படுத்தி தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும். டிச.13 மாலை 6 மணி அளவில் 20,068 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். திருவண்ணாமலையில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவால் தீபம் ஏற்றப்படுவது பாதிக்கப்படாது. இந்த ஆண்டு தீபத்திருவிழாவில் 40 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

The post இந்த வருட தீப திருவிழாவில் மலை உச்சியில் தீபம் எரியும்.. எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெறும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி!! appeared first on Dinakaran.

Read Entire Article