இந்த கால ரசிகனை ஏமாற்றினால் அவனுக்குப் பிடிக்காது - இயக்குநர் சேரன் பேட்டி

5 hours ago 2

சேரனின் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான படம் 'ஆட்டோகிராப்'. 2004-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், அந்த நேரத்தில் பலரின் மலரும் நினைவுகளை ஆழ்மனதில் இருந்து கிளறி எழச்செய்தது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு, 'ஆட்டோகிராப்' படத்தை மீண்டும் மறுவெளியீடு செய்ய உள்ளனர். இதற்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கிய டிரெய்லரையும் வெளியிட்டிருந்தனர். சமீபத்தில் ஒரு பேட்டியில், சேரனிடம், 'ஆட்டோகிராப்' படத்தின் மறு வெளியீடு பற்றி கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

அந்தப் படம் 2 மணி நேரம் 50 நிமிடம் கொண்டது. அன்றைக்கு இருந்த பொறுமையை, இன்று நாம் ரசிகர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அதனால் படத்தின் 20 நிமிடக் காட்சியை குறைத்திருக்கிறேன். சில காட்சிகளை இன்று பார்க்கும்போது, எனக்கே இது கிரிஞ்ச், பூமர் என்று தோணும். அந்த உண்மையை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகணும். அதனால்தான் தேவையில்லாத காட்சிகளை வெட்டி விட்டேன். அதோடு இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப ஒலியில் மாற்றம் செய்து, ரீ-வொர்க் பண்ணியிருக்கிறேன்.

இன்றைய தொழில்நுட்பத்திற்கு ஏற்றபடி 'ஆட்டோகிராப்' தயார் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு தூரம் சிரமத்தை பார்க்காமல் உழைப்பதற்கு காரணம், இன்றைக்கு இருக்கிற பார்வையாளர்கள் முட்டாள் இல்லை. அவர்கள் புத்திசாலி. அந்த ரசிகனை ஏமாற்றினால், அவனுக்குப் பிடிக்காது. எனவே அவனுக்கான பொறுப்போடு நாமும் படத்தை கொடுக்கணும்னு நினைக்கிறேன்" என்றார்.

Read Entire Article