பின்லாந்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - 5 பேர் பலி

4 hours ago 2

ஹெல்சின்கி,

எஸ்தோனிய தலைநகர் தாலினில் இருந்து ஒன்றாகப் புறப்பட்ட இரண்டு ஹெலிகாப்டர்கள், பின்லாந்தின் யூரா விமான நிலையத்திற்கு அருகில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஹெலிகாப்டர்களில் இருந்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு ஹெலிகாப்டரில் இரண்டு பேரும், மற்றொன்றில் மூன்று பேரும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இரண்டு ஹெலிகாப்டர்களும் பின்லாந்திற்கு வெளியே பதிவு செய்யப்பட்டவை என்வும் ஒரு ஹெலிகாப்டர் எஸ்டோனியாவிலும், மற்றொன்று ஆஸ்திரியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கவுட்டுவா நகருக்கு அருகே , ஓஹிகுல்குட்டி சாலையில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் ஹெலிகாப்டரின் பாகங்கள் விழுந்துகிடப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக தேசிய புலனாய்வுப் பிரிவு உள்ளூர் காவல்துறையினருடன் கூட்டு விசாரணையை நடத்தி வருகிறது.

Read Entire Article