இந்த இந்திய வீரர் எந்த சூழலிலும் சிறப்பாக ஆடக்கூடியவர் - பிரையன் லாரா

3 months ago 21

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு எந்த சூழலிலும் சிறப்பாக விளையாடக்கூடிய திறமை இருக்கிறது என வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா கூறியுள்ளார். இது தொடர்பாக மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரையன் லாரா கூறியதாவது,

இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு எந்த சூழலிலும் சிறப்பாக விளையாடக்கூடிய திறமை இருக்கிறது. வெஸ்ட் இண்டீசில் அவர் பேட்டிங் செய்த விதத்தை பார்த்திருக்கிறேன். அதே சமயம் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்கள் கொஞ்சம் வித்தியாசமானது.

ஆனால் உங்களது பலத்தை நம்பி விளையாடினால், எந்த சூழலிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். மனரீதியாக சில விஷயங்களை மாற்றிக் கொண்டால் ஆஸ்திரேலிய மண்ணில் சாதிக்கலாம் என கூறினார். இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சென்று 5 டெஸ்டில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article