
மும்பை,
பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சிங்கம் அகெய்ன்'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக இவர் அஜய் தேவ்கனை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.
இந்நிலையில் ரோஹித் ஷெட்டி, பாகுபலி மற்றும் கல்கி 2898 ஏடி படங்கள் ஒரு இயக்குனராக தனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், ஒரு கதையை எவ்வாறு காட்சிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை கற்றுக்கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், இதுபோன்ற படங்கள் இந்திய சினிமாவின் எல்லைகளைத் தள்ளி, மற்ற இயக்குனர்களை பெரிதாக சிந்திக்கத் தூண்டுகின்றன என்றும் ஷெட்டி கூறினார்.