
ரோம்,
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான மரியா சக்காரி (கிரீஸ்), போலந்தின் மக்தா லினெட் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் மரியா சக்காரி கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த அடுத்த இரு செட்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மக்தா லினெட் 6-4, 6-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.
இறுதியில், 1-6, 6-4, 6-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற மக்தா லினெட் 3வது சுற்றுக்கு முன்னேறினார். 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட மரியா சக்காரி தொடரில் இருந்து வெளியேறினார்.