சென்னை,
தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக 'ரெட்ரோ' படத்திலும், ஷாஹித் கபூருடன் தேவா படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதில், தேவா படம் கடந்த மாதம் 31-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மறுபுறம் சூர்யாவுடன் நடித்துள்ள 'ரெட்ரோ' படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ரெட்ரோவை எண்ணி மிகவும் பெருமைப்படுவதாக நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.
"இதுவரை நடித்த அனைத்து படங்களை நினைத்துமே நான் பெருமைப்படுகிறேன். ஆனால், ரெட்ரோவை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறேன். அதில் உள்ள அனைத்து காட்சிகளையும் விரும்புகிறேன். படப்பிடிப்பின்போது படக்குழுவினர் அனைவரும் முழு எனர்ஜியுடன் இருந்தனர். படத்தில் எனது கதாபாத்திரத்தை அருமையாக உருவாக்கி இருக்கின்றனர்' என்றார்.