
சென்னை,
அஜித் நடிப்பில் கடந்த 10-ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில், இயக்குனர் ஆதிக், நடிகர்கள் அர்ஜுன் தாஸ், ரகுராம் மற்றும் நடிகை பிரியா வாரியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த விழாவில் நடிகர் ரகுராம் பேசுகையில்,
"எனக்கு இப்போதுவரை சரியாக தமிழில் பேச தெரியாது. இனிமேல் தமிழில் பேச முயற்சிக்கிறேன். நான் நிறைய இந்தி, பெங்காலி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற ஒரு படத்தை பார்த்ததில்லை. இப்படத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கும் நடனமாட வைத்ததற்கும் இயக்குனருக்கு நன்றி. படக்குழுவினர் அருமையாக நடித்திருந்தனர். அனைவருக்கும் வாழ்த்துகள்' என்றார்.