மதுரை: காளியம்மாள் வேறு கட்சிக்கு செல்ல விரும்பினால் செல்லலாம் என சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்; இந்தி மொழி பேசுபவர்களால்தான் இந்தியா என்பது இல்லை; எங்கள் மொழி மீது எங்களுக்கு பற்று இருப்பது தேசத்துரோகம் இல்லை. மும்மொழியில் எம் மொழி இருக்கக் கூடாது என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? மாணவர்களை படிக்க வைக்கும் உரிமைகூட மாநிலத்திற்கு இல்லை என்பது எப்படி?
மற்றவர்கள் ஏற்கிறார்கள் என்பதற்காக நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள் என்பது நியாயமா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து காளியம்மாள் விலகியதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்; வேறு கட்சிக்கு செல்லலாமா வேண்டாமா என முடிவு எடுக்கும் உரிமை காளியம்மாளுக்கு உண்டு உள்ளது. நாதகவில் தொடர்ந்து இருப்பதா? அல்லது விலகுவதா? என்பதை காளியம்மாள் முடிவு செய்யட்டும். இலையுதிர் காலம் போல எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம்.நா.த.க.வில் இருந்து போவதென்றால் போகட்டும்; வாழ்த்துகள், நன்றி என்று கூறினார்.
The post இது எங்கள் கட்சிக்கு களை உதிர் காலம் -காளியம்மாள் விலகியதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு சீமான் பதில் appeared first on Dinakaran.