இண்டியன்வெல்ஸ்1: இண்டியானா வெல்ஸ் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுப் போட்டியில் நேற்று ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரிவா, அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா, கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ஆண்ட்ரெவ்னா ரைபாகினா அபாரமாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். இண்டியானா வெல்ஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இண்டியானா வெல்ஸ் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டி ஒன்றில் உலகத் தரவரிசையில் 9ம் நிலை வீராங்கனை, ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரிவா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசன் உடன் மோதினார். அற்புதமாக ஆடிய மிர்ரா, 6-3, 6-0 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்ற போட்டிகளில் அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா, சீன வீராங்கனை வாங் ஸிங்யுவையும், கஜகஸ்தான் வீராங்கனை ரைபாகினா, பிரிட்டன் வீராங்கனை கேட்டி போல்டரையும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, அமெரிக்க வீராங்கனை டேனியல் ரோஸ் காலின்சையும் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
* ஆடவர் பிரிவில் மெத்வதெவ் அபாரம்
ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுப் போட்டி ஒன்றில் ரஷ்யாவை சேர்ந்த உலகின் 5ம் நிலை வீரர் டேனியில் மெத்வதெவ், அமெரிக்க வீரர் அலெக்ஸ் மைக்கெல்சன் உடன் மோதினார். முதல் செட்டில் மெத்வதெவ் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தபோது, மைக்கெல்சன் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். இதனால், மெத்வதெவ் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி இடையே மற்றொரு போட்டி நடந்தது. சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
The post இண்டியானாவெல்ஸ் ஓபன் டென்னிஸ்: கிளாராவை வீழ்த்திய மிர்ரா; 3வது சுற்றில் பெகுலா, எலெனா வெற்றி appeared first on Dinakaran.